டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சென்னையில் மார்ச் 29 அன்று, கிளாகோமா நோயாளிகள் மாநாட்டை நடத்துகிறது. இதில் இந்தியாவின் முன்னணி கண் மருத்துவர்கள் மற்றும் கிளாகோமா நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர்.
இந்த மாநாட்டில் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புவதற்காகவும், தொலைதூரத்தில் இருந்து நோயாளிகள் பங்கேற்பதை எளிதாக்குவதற்காகவும் இந்த மருத்துவமனை நாடு முழுவதும் உள்ள அதன் மையங்களில் வீடியோ கான்பரன்சிங் வசதிகளை நிறுவுகிறது.
இதில் பங்கேற்பதற்காக பதிவு செய்ய, நோயாளிகள் www.dragarwal.com/glaucoma-patient-summit/ என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 95949 01868 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
தனிப்பட்ட முறையில் இதில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், அடிப்படையான கிளாகோமா கண் பரிசோதனை இலவசமாக நடத்தப்படும். இதில், பங்கேற்பதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.99 ஆகும்.