fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ஆய்வு சுருக்கம் சமர்ப்பித்தல் போட்டி

கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ஆய்வு சுருக்கம் சமர்ப்பித்தல் போட்டி

கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் சார்பில் இன்னோவ்சென்ஸ்-24 என்ற பெயரில் கல்லூரிகளுக்கிடையிலான ஆய்வு சுருக்கம் சமர்ப்பித்தல் போட்டி நடைபெற்றது.

200 பேர் பதிவு செய்த இந்த போட்டியில் 155 ஆய்வு சுருக்கங்கள் சமர்ப்பிக்கபட்டன.

சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகளை சர்வதேச நிறுவனங்களை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து, அதில் 30 ஆய்வுகளை இறுதி போட்டிக்கு தேர்வு செய்தது. இதையடுத்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற 10 ஆய்வு சுருக்கங்கள் மற்றும் இரண்டு சிறந்த வழிகாட்டி பேராசிரியர்களுக்கு ரூ.1,70,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர்.சரவணன் பங்கேற்று பரிசு களை வழங்கினார்.

இந்த போட்டிப் புதுப்புது யோசனைகளைத்தூண்டும் வகையில் அமைந்ததாகப் போட்டியில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img