கோவையில் 100 படுக்கைகள் கொண்ட புதிதாக நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அவேரா இதய மருத்துவமனை மேட்டுபாளையம் ரோட்டில் திறக்கப்பட்டு உள்ளது. இவ்விழாவில் பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் எஸ்.வி.பாலசுப் பிரமணியம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் டாக்டர் ரமணி மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்
இது குறித்து டாக்டர் ராஜ்பால் கே அபாய் சந்த் டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் கூறியதாவது:-

இதய சிகிச்சைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த மருத்துவமனையில் 2 கேத்லேப்கள், 2 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், 181 படுக்கைகள் கொண்ட இதய சிகிச்சைப் பிரிவு, 16 படுக்கைகள் கொண்ட இதயமார்பக அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பிரிவு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 24 மணி நேர மருந்தகம், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சிகிச்சை சேவைகளும் வழங்கப்படு00கின்றன. இதன் மூலம்கோவை, திருப்பூர் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மேம்பட்ட இருதய சிகிட்சை வசதிகள் கிடைக்கும்
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்



