fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர் பேரவை பதவியேற்புவிழா

கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர் பேரவை பதவியேற்புவிழா

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் பேரவை பதவியேற்பு விழா இன்று (ஜூன் 13) காலை 9.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் ஜேம்ஸ் ஞானதாஸ் (கௌரவப் பொருளாளர்), சுசிதா ராமச்சந்திரன் (நிர்வாகக்குழு உறுப்பினர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


பள்ளி முதல்வர் பி.ஏ.ஜான் ஸ்டீபன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் திவாகரன், துணை முதல்வர் பிரியாஷீன், பள்ளி உதவித் தலைமையாசிரியர் மார்டின் லூதர்கிங் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
முன்னதாக பள்ளி முதன்மை மாணவி மரியம் டாக்கின் தொடக்கப் பிராத்தனையுடன் விழா தொடங்கியது. பாட இணைச்செயல்பாடுகளின் தலைமை மாணவி விகாசினி விவிலிய வாசிப்பு செய்தார். பள்ளி இசைக்குழுவினர் பள்ளிப்பாடலை இசைத்தனர்.
பள்ளி முதல்வர். பி.ஏ. ஜான்ஸ்டீபன் சிறப்பு விருந்தினர்களையும் பெற்றோர்களையும் வரவேற்றார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக புதிய மாணவர் பேரவை உறுப்பினர்களுக்கு டாக்டர் ஜேம்ஸ் ஞானதாஸ், சுசிதா ராமச்சந்திரன் ஆகியோர் மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். மாணவர்கள் பள்ளியின் பாரம்பரியத்தைக் காத்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.
சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு தலைமைப்பண்பு, பொறுப்புணர்வு குறித்து உரையாற்றினர். முதன்மை மாணவர் சாத்விக் நன்றியுரை வழங்கினார்.
இந்த விழா மாணவர்களிடையே தலைமைத்துவம் மற்றும் சேவை மனப்பான்மையை வலுப்படுத்துவதாக இருந்தது.

படிக்க வேண்டும்

spot_img