சிந்தி இன்டர்நேஷனல் பள்ளியில் வி.எஸ்.ஆர் ரோலிங் டிராபி போட்டி நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் போட்டியில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இது அமைந்தது.
இதில் தி பிஎஸ்பிபி மில்லேனியம், ஜி.டி பள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா, அவிலா கான்வென்ட், சௌடேஸ்வரி, எஸ்எஸ்விஎம் போன்ற ஆறு முன்னணி பள்ளிகளில் இருந்து சுமார் 150 மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இவ்விழாவில் முக்கிய விருந்தினராக கவிதா மகேஸ்வரி தலைவி ஏகல் மகிலா சமிதி மற்றும் செய லாளர் சப்னா சாகித் ஆகியோர் தலைமை வகித்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
பள்ளி முதல்வர் பாக்கியலட்சுமி சீனிவாசன் மாணவர்களின் சாதனையைப் பாராட்டி இத்தகைய விழாக்கள் அவர் களின் திறன்களை வளர்க்கும் வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.



