fbpx
Homeபிற செய்திகள்சவுதி அரேபியாவில் 23 லட்சம் இந்தியர்களுக்கு ‘விடுதலை’!

சவுதி அரேபியாவில் 23 லட்சம் இந்தியர்களுக்கு ‘விடுதலை’!

சவுதி அரேபியாவில் சுமார் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த கஃபாலா என்ற கொடுமையான கொத்தடிமை முறை நடைமுறையில் இருந்து வந்தது. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடிமையாக்கி அவர்களின் உழைப்பை முதலாளிகள் சுரண்ட வழிவகை செய்தது.


ஒரு தொழிலாளி வேலையில் இருந்து வேறு இடத்துக்கு மாறலாமா, நாட்டைவிட்டு வெளியேறலாமா அல்லது சட்ட உதவியை நாடலாமா என்பதை முதலாளிகள் மட்டுமே தீர்மானிக்க முடியும். 1950களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறையானது, வளைகுடா நாட்டின் பொருளா தாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான குறைந்த விலை வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டது.


ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு உள்ளூர் ஸ்பான்சருடன் பிணைக்கப்பட்டார். தங்களது ஸ்பான்சரின் ஒப்புதல் இல்லாமல் தொழிலாளர்கள் வேலைகளை மாற்றவோ, நாட்டைவிட்டு வெளியேறவோ அல்லது புகார்களை கூட பதிவு செய்யவோ முடியாது.
சமீப காலமாக இந்த முறையில் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்கள் அதிகரித்தது. உலக நாடுகள் பலவும் இதனை கடுமையாக விமர்சித்து வந்தன.


இந்நிலையில் கஃபாலா முறையை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்த ஆண்டு ஜூன் மாதம் சவுதி அரேபியா அறிவித்து இருந்தது.


இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கஃபாலா முறையை சவுதி அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.


இது ஒரு முற்போக்கான நடவடிக்கை ஆகும். இதன் மூலம் 23லட்சம் இந்தியர்கள் உட்பட 1.3 கோடி வெளிநாட்டு தொழிலாளர்கள் அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெறப் போகிறார்கள். குறிப்பாக அங்கு வாழும் இந்தியர்களுக்கு இரண்டாவது சுதந்திர தினநாளாகும்.


இந்த நடவடிக்கையானது தொழிலாளர் உரிமைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நலனை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகும். 50 ஆண்டுகால பிற்போக்கான அடிமைத்தனக் கொடுமைக்கு சவுதிஅரேபிய அரசு, காலம் தாழ்ந்தேனும் முற்றுப்புள்ளி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது!

படிக்க வேண்டும்

spot_img