fbpx
Homeபிற செய்திகள்வாழ்க்கைத் திறன் இலக்குகளை அடைவதில் கோவை செயின்ட் ஜூட்ஸ் பள்ளி சாதனை தமிழ்நாட்டிலேயே முதலிடம்

வாழ்க்கைத் திறன் இலக்குகளை அடைவதில் கோவை செயின்ட் ஜூட்ஸ் பள்ளி சாதனை தமிழ்நாட்டிலேயே முதலிடம்

வாழ்க்கைத் திறன் அபிவிருத்தி இலக்குகள் ஏற்புடைய பள்ளிகள் (SDGS) திட்டத்தின் கீழ் 2025-26ம் ஆண்டிற்கான இந்திய கல்வி உலக பள்ளிகளின் கிரேண்ட் ஜூரி ரேங்கிங் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்த விருதுகள் மனித மூலதன பராமரிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றுதலுக்கும் துவக்க இடைநிலைக் கல்வியில் 21ம் நூற்றாண்டின் புதுமைகளை புகுத்துவதற்கும் பணியாற்றும் பள்ளிகளை பாராட்டும் வகையிலும் வழங்கப்படுகிறது.
இதில் இந்தியாவின் முதல் 10 பள்ளிகளில் 9வதாகவும் தமிழ்நாட்டில் முதலாவதாகவும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செயின்ட் ஜூட்ஸ் பள்ளி மற்றும் இளையோர் கல்லூரி விருதுக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையால் 2015ல் தேர்வு செய்யப்பட்ட வாழ்க்கைத் திறன் அபிவிருத்தி இலக்குகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து கற்பிக்கும் இலக்குகளைப் பூர்த்தி செய்து தரமான கல்வியை வழங்கவும் நினைவாற்றலை மேம்படுத்தும் திறமைகள் மற்றும் வாழ்க்கை நெறிகளை நடைமுறைப்படுத்தவும் பள்ளியின் உள்ளேயே தரமான கல்வியை வழங்கி வளர்வதை குறிக்கோளாக கொள்பவையாகும்.

செயல்முறை இயக்குநர் டாக்டர் சம்ஜித் தனராஜன் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் சரோ தனராஜன் ஆகியோர் கடந்த 16ம் தேதி அன்று டெல்லி புல்மேன் ஏரோ சிட்டியில் கௌரவிக்கப்பட்டனர். பள்ளியின் அருமையான திறமைக்கு இச்சாதனை அதன் அனைத்துத் துணை நிறுவனங்களாலும் பெருமையுடன் கொண்டாடப்பட்டது.
தலைவர் டாக்டர் பி.பி.தனராஜன் மற்றும் அதன் அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர்களது நிரந்தர ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பிற்கு முழு மனதுடன் நன்றி தெரிவிக்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img