fbpx
Homeபிற செய்திகள்சில்ட்ரன் சாரிட்டபிள் அறக்கட்டளை அன்பின் தீப விழாவில் தூய்மை காவலர்களுக்கு சிறுதானிய உருண்டை

சில்ட்ரன் சாரிட்டபிள் அறக்கட்டளை அன்பின் தீப விழாவில் தூய்மை காவலர்களுக்கு சிறுதானிய உருண்டை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைக் காவலர்கள் சுமார் 104 பேருக்கு தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக சிறுதானிய உருண்டைகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக டிரஸ்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் வரவேற்புரை ஆற்றினார்.


சிறப்புரை ஆற்றிய ஆணையாளர், தூய்மைக் காவலர்களுக்கு சிறுதானிய உருண்டைகளை வழங்கினார். உடன் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் பழனிசாமி மற்றும் தூய்மை காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நகரின் தூய்மையை உறுதிசெய்யும், தூய்மை காவலர்களுக்கு, அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் வகையில் சிறுதானிய உருண்டைகள் வழங்கிய சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட்க்கு, சுகாதார அலுவலர் நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img