ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் ஆசனூர் மற்றும் தலமலை ஊராட்சிகளைச் சேர்ந்த எட்டு கிராமங்களைச் சேர்ந்த 91 பழங்குடியின மாணவ – மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவை எலக்ட்ரிக்கல் இன்ஸ்டலேஷன் இன்ஜினியர் வெல்ஃபேர் அசோசியேஷன் மற்றும் ரீடு தொண்டு நிறுவனம் நடத்தியது.
ரீடு நிறுவனத்தின் திட்ட மேலாளர் பழனிச்சாமி, சரவணகுமார், அசோசியேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் எம்.மணிகண்டன், பொருளாளர் கே.செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்களாக ஆசனூர் எக்கோ டெவலப்மென்ட் ரேஞ்சர் கே.பிரகாஷ், ஆசனூர் ரேஞ்சர் கே.வெங்கடாசலம், சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சரஸ்வதி, ஆசனூர் உதவி காவல் ஆய்வாளர் குமணவேந்தன் மற்றும் ரீடு இயக்குநர் இரா.கருப்புசாமி ஆகியோர் கல்வி குறித்து பழங்குடியின மாணவர்களுக்கு உரை ஆற்றினர்.