டெல்லி அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பொறுப்பான செல்லப்பிராணி வளர்ப்பு, மனிதாபிமான தெருநாய் மேலாண்மை பற்றிய உரையாடல்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், 100+ ஆண்டு பாரம்பரியத்தைக் கொண்ட உலகளாவிய செல்லப்பிராணி பராமரிப்பு, சிற்றுண்டி, உணவு நிறுவனமான மார்ஸ், அதன் மார்ஸ் குளோபல் தத்தெடுப்பு வாரஇறுதி 2025 மூலம் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியை தொடங்கியுள்ளது.
இது வீடற்ற செல்லப்பிரா ணிகளை அன்பான குடும்பங்களுடன் இணைக்கும் மற்றும் பொறுப்பான செல்லப்பிராணி வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி.
11 இந்திய நகரங்களில் நடைபெறும் இந்த பிரச்சாரத்தின் மூலம் தத்தெடுக்க, கற்றுக்கொள்ள மற்றும் செயல்பட 14 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அணிதிரட்டப்பட்டனர்.
இந்த முன்முயற்சி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், மெக் ஸிகோ, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மார்ஸ் உலகளாவிய ‘உருமாறிய இரண்டு உயிர்கள்’ முயற்சியின் ஒரு பகுதியாகும்.
மார்ஸ் பெட்கேர் இந்தியா வின் நிர்வாக இயக்குநர் சலீல் மூர்த்தி கூறுகையில், “நீங்கள் ஒரு செல்லப்பிராணியைத் தத்தெடுக்கும்போது, நீங்கள் அவற்றின் வாழ்க்கையை மட்டும் மாற்றுவதில்லை உங்கள் வாழ்க்கை யையும் மாற்றுகிறீர்கள்.
இன்று இந்தியாவில் கிட்டத்தட்ட 70 மில்லியன் வீடற்ற பூனைகள் மற்றும் நாய்கள் உள்ளன.
உலகின் வீடற்ற செல்லப் பிராணிகள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு இது. மேலும் ஒவ்வொரு தத்தெடுப்பும் இந்த சுமையைக் குறைக்கிறது” என்றார்.