கோவை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி, கேம்ஃபோர்டு கோல்டன் பூட் சாம்பியன்ஷிப் 2025 கால்பந்து போட்டியை நடத்தியது.
பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான இந்த கால் பந்து போட்டியில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து அணிகள் பங்கேற்றன.
இந்த நிகழ்வில் 14 வயதுக்குட் பட்ட மாணவர்கள் மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவுகளில் போட்டிகள் இடம் பெற்றன. போட்டியில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி அசத்தலாக விளையாடி னர். இந்த போட்டிகளின் முடிவுகள் வருமாறு:
மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் தி கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி அணி வென்று முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாம் இடத்தை அனன் சர்வதேச பள்ளி அணி கைப்பற்றியது.
மாணவிகளுக்கான போட்டியில் தி கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. சின்மயா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி அணிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.
தனிப்பட்ட விருதுகளில் மாணவிகள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக- தி கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி மாணவி தனிஷ்கா சுதிரும் சிறந்த கோல் கீப்பராக தி கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி மாணவி அக்ஷராவும் தேர்வு செய்யப்பட் டனர்.
மாணவர்கள் பிரிவில் சிறந்த தடுப்பு ஆட்ட வீரராக – தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி மாணவர் எஸ்.சாத்விக் தேர்வானார். வெற்றி பெற்ற அணிகளில் பங்கேற்ற மாணவர்கள், மாணவி களை தி கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி தலைவர் என்.அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
இதுபோன்ற போட்டிகள் ஒழுக்கம், மீள்தன்மை மற்றும் குழுப் பணியை வளர்க்கின்றன என்பதை சுட்டிக்காட்டி போட்டியில் பங்கேற்று திறனை வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களையும் அவர்கள் பாராட்டி னர்.