fbpx
Homeபிற செய்திகள்சென்னை எம்ஜிஎம் மலர் மருத்துவமனையில் பக்கவாதத்திற்கான அதிவேக சிகிச்சை அறிமுகம்

சென்னை எம்ஜிஎம் மலர் மருத்துவமனையில் பக்கவாதத்திற்கான அதிவேக சிகிச்சை அறிமுகம்

பக்கவாதத்திற்கு மேம்பட்ட நவீன சிகிச்சையையும், நோயாளிகளுக்கு சிறப்பான ஆதரவையும் உடனடியாக வழங்குவதற்கு பக்கவாதத்திற்கான அதிவேக சிகிச்சை பதில்வினை குழு என்பதை சென்னை எம்ஜிஎம் மலர் மருத்துவமனை தொடங்கியிருக்கிறது.

அக்டோபர் 29-ம் தேதியன்று அனுசரிக்கப்படும் இந்த ஆண்டுக்கான உலக பக்கவாத தினத்திற்கு “ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது” என்ற கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதனைக் குறிக்கும் விதத்தில் பக்கவாதத்திற்கான சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்து ஆரோக் கியமான வாழ்க்கையை மீண்டும் வாழத் தொடங் கியிருக்கிற ‘பக்கவாதத்தை வென்ற போராளிகளை’ இம்மருத்துவமனை கௌரவித்திருக்கிறது.

மிக நவீன இடையீட்டு சிகிச்சைக்கான ஆஞ்சியோகிராபி சாதனங்கள் நிறுவப்பட்டுள்ள ஒரு மேம்பட்ட நியூரோ கேத் லேபையும் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கியிருக்கிறது. மூளை மற்றும் முதுகுத்தண்டு நாள பாதிப்புகளுக்கு துல்லியமான நோயறிதலை செய்யவும் மற்றும் குறைவான ஊடுருவல் உள்ள சிகிச்சையை வழங்கவும் அவசியமான நவீன இடையீட்டு ஆஞ்சியோகிராஃபி சாதனங்கள் இந்த கேத் லேப்பில் இடம் பெற்றுள்ளன.

ஆரம்ப நிலையிலேயே பக்கவாத பாதிப்பை அடையாளம் காண்பது, விரைவாக சிகிச்சை பெறுவது மற்றும் மூளை ஆரோக்கியத்தைப் பேண முன்தடுப்பு நடவடிக்கைகள் மீதான முக்கியத்துவத்தை வலுவாக முன்னிலைப்படுத்தும் நோக்கத்தோடு முதுநிலை மூளை நரம்பியல் மருத்துவர்கள் ஆற்றிய சிறப்புரைகளும் இந்நிகழ்வில் இடம் பெற்றன.

அனபாண்டு லிமிடெட் இயக்குநர் ஜானகிராமன் விஜயக்குமார் செம்பியன், பிரபல திரைப்பட நடிகர் செந்தில், விசாகப்பட்டினம் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் சுங்கவரி துணை ஆணையர் வினய், ஜீ தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையின் தொகுப்பாளர் ஆவுடையப்பன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

எம்ஜிஎம் மலர் மருத்துவமனையின் இடையீட்டு நரம்பியல் சிகிச்சைக்கான முதுநிலை நிபுணர் டாக்டர் எஸ். கார்த்திகேயன் பேசுகையில், பக்கவாத பாதிப்பின் அறிகுறிகளை விரைவாக அடையாளம் காண்பதும் மற்றும் பக்கவாதத்திற்கு சிறப்பான சிகிச்சை வழங்கும் திறன் கொண்ட மருத்துவமனைக்கு தாமதமின்றி நோயாளியை அழைத்துச் செல்வதும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்“ என்றார்.

எம்ஜிஎம் மலர் மருத்துவமனையின் இடையீட்டு நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர். சாய் பிரஷாந்த் கூறுகையில், “மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சிகிச்சையில் உயர்ந்த வெற்றி விகிதத்தின் ஆதரவோடு சிக்கலான மூளை மற்றும் முதுகுத்தண்டு இடையீட்டு சிகிச்சைகளை எமது நிபுணத்துவம் மிக்க மூளை நரம்பியல் நிபுணர்கள் குழு வழங்குகிறது” என்றார்.

நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் உள்நாள நரம்பியல் அறுவைசிகிச்சைகள் துறையின் நிபுணர் டாக்டர். A அரவிந்த் குமார் கூறுகையில், “பக்கவாதம் வராமல் தடுக்க முன்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உள்நாள நரம்பியல் இடையீட்டு சிகிச்சைகள் பயனளிக்கும் பக்கவாத மேலாண்மைக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன” என்று கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img