மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான இறகுபந்து போட்டி சென்னை தமிழ்நாடு உடற்கல்வி கல்லூரியில் நடைபெற்றது.
இதில் 38 மாவட்டங்களிலிருந்து மாணவ / மாணவியர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் தி ஃப்ரண்ட்லைன் பள்ளி மாணவ / மாணவிகள் கலந்து பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
மாணவர் பிரிவில் இறகுபந்து இரட்டையர் பிரிவில் S.ரிபினேஷ் மற்றும் S.B.கிருத்திக் இறுதி போட்டியில் மதுரை அணியை 2-0 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று ரூ.1,50,000 பரிசு பெற்றனர்.
இறகுபந்து ஒற்றையர் பிரிவில் K.A.கவியுகன் மூன்றாம் இடம் பெற்று ரூ.50,000 காசோலை பெற்றார்.
மாணவியர் பிரிவில் இறகுபந்து இரட்டையர் பிரிவில் கிருத்தியா மற்றும் சமீரா மாநில அளவில் கலந்து கொண்டு சிவகங்கை அணியை 2-0 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று ரூ.1,50,000 காசோலை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் கே.சிவசாமி, செயலாளர் டாக்டர் எஸ்.சிவகாமி பள்ளியின் இயக்குனர் சக்தி நந்தன், இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் வசந்தராஜ், உடற்கல்வி ஆசிரியர் செந்தில் ஆகியோர் பாராட்டினார்கள்.



