டாடா குழுமத்தில் ஒரு அங்கமான தனிஷ்க் பழைய தங்க நகைகளை கொடுத்து புதிய தங்க நகைகளை வாங்குபவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி வரை அனைத்து காரட்களிலும் ( 9 கேரட் என்ற குறைந்த அளவு வரை) எந்த பிடித்தம் இன்றி புதிய நகை தரும் சிறப்பு சலுகையை நுகர்வோர்களுக்காக முதல் முறையாக வழங்குகிறது.
இத்திட்டத்தை ஈரோடு தனிஷ்க் நகை கடையில் நடந்த நிகழ்வில் லோட்டஸ் குடும்பத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர், டைட்டன் கம்பெனியில் லிமிடெட் ஏரியா பிசினஸ் மேலாளர் சிவரஞ்சனி, வென்ச்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட் பொது மேலாளர் கிஷோர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



