fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகளுக்கு பொது மருத்துவ சிகிச்சை முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு பொது மருத்துவ சிகிச்சை முகாம்

கோவை ஸ்பின்சிட்டி அரிமா சங்கம், ராயல்கேர் மருத்துவமனையுடன் இணைந்து, கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பொது மருத்துவ சிகிச்சையளிக்கும் முகாம் திருச்சி சாலை இராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் குடும்பத்தினருக்கு 1 மாதத்திற்குத் தேவையான உணவு மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினர்.


இந்நிகழ்ச்சியில் ஸ்பின் சிட்டி அரிமா சங்க தலைவர் சந்திரன், செயலாளர்கள் ஜெகதீசன், நிதர், பொருளாளர் காளீஸ்வரன் மற்றும் ஆனந்தன், நலாஸ் சீனிவாசன், நாகராஜன், ராதாகிருஷ்ணன், மணிகண்டன், மோகன், கண்ணபிரான், சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், அரூர், திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.


இதற்கான ஏற்பாடுகளை கிருபையின் வெளிச்சம் பொதுநல அறக்கட்டளையின் மகேந்திரன் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img