போத்தனூர் இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்குபட்ட இடங்களில் உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் ரயில் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
இதில் ரயிலில் பயணம் செய்யும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், அவர்களுக்கு பயணத்தின் போது ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடி காவல் உதவிக்குக்கு ரயில்வே ஹெல்ப்லைன் எண் 1512/139 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிறுவர்கள் ரயில் போகும் போது ரயிலில் கல் மட்டும் பிற பொருள்களை எறிவது தண்டவாளத்தில் கற்களை வைத்தல் போன்ற குற்றச்செயலில் ஈடுபடக்கூடாது என்றும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.



