fbpx
Homeபிற செய்திகள்வாழ்க்கையில் உயர மாணவர்கள் ரிஸ்க் எடுக்க வேண்டியது அவசியம்: ஓய்வுபெற்ற எஸ்.பி. கலியமூர்த்தி அறிவுரை

வாழ்க்கையில் உயர மாணவர்கள் ரிஸ்க் எடுக்க வேண்டியது அவசியம்: ஓய்வுபெற்ற எஸ்.பி. கலியமூர்த்தி அறிவுரை

டிஎன்பிஎஸ்சி யுபிஎஸ்சி தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும். ரிஸ்க் எடுக்காமல் இருப்பது வாழ்க்கையில் மிகப்பெரிய ஆபத்து என்று ஓய்வு பெற்ற எஸ்.பி. டாக்டர் கலியமூர்த்தி கூறினார்.

திமுக ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஜே.திருவாசகம் தலைமை யில் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ 3வது பயிற்சி நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற எஸ்.பி. டாக்டர் கலியமூர்த்தி உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: வாழ்க்கையில் கணக் கீட்டு ரிஸ்க் எடுப்பது தவறல்ல. சாதாரண வேலைக்கு முயற்சிப்பது, திருமணம் செய்து கொள்வது, வீடு வாங்க வங்கிக் கடன் பெறுவது போன்ற சாதாரண வாழ்க்கையை சமூகம் மதிக்காது.

மாணவர்கள் வாழ்க் கையில் ஏதாவது சாதிக்க வேண்டும். அவர்கள் உயர்ந்த இலக்கை நிர்ணயித்து அதை அடைய முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் சமூகத்தால் மதிக்கப்படுவார்கள். கல்வி ஒன்று தான் அந்த உயர்வை தரும். மின் விளக்கை கண்டுபிடிப்பதற்கு முன்பு எடிசன் 1000 முறைக்கு மேல் தோல்வியடைந்தார்.

திருக்குறள் எழுத திருவள்ளுவர் பல ஆண்டுகள் உழைத்தார். கட்சியைப் பெரியதாக மாற்ற கலைஞர் கடுமையாக உழைத்தார். எனவே, ஒருவர் பெரியதைச் சாதிக்க முயற்சிக்க வேண்டும். இல்லை யெனில், அவர்களின் வாழ்க்கை வீணானது. எனவே, இறப்பதற்கு முன், ஒருவர் தனது இலக்கை அடைய சிறந்த முறையில் முயற்சிக்க வேண்டும்.

வாய்ப்புகள் அனை வருக்கும் சமம். ஆனால் சிலர் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் மட்டுமே சமூகத்தில் பிரகாசிக்கிறார்கள். தங்கள் நேரத்தைச் சும்மா கழித்தவர்களுக்கு வெற்றி கிடைக்காது.

பிறந்தவர்கள் அனைவரும் இறக்க வேண்டும். ஆனால், இறந்த பிறகும், உலகம் ஒருவரைப் பற்றிப் பேச வேண்டும். அவர்கள்தான் சாதனையாளர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி இயக்குனர் வெங்கடாச்சலம், திமுக மாவட்ட துணை செயலர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img