தூத்துக்குடியில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில், தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பற்றி கருத்து தெரிவித்த மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறியதாவது:
தமிழ்நாட்டில் தங்களது அரசியல் நிலையை தக்க வைத்துக் கொள்ள பாஜக, அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஜெய லலிதா உயிருடன் இருந்த போது அதிமுகவை தொட முடியவில்லை. ஆனால், அவர் மறைந்த பின் தலைமை பலவீனத்தை பயன்படுத்தி, கட்சியைப் பிளக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. எடப்பாடி பழனிசாமி கட்சியில் பலம் பெறுவதை பாஜக விரும்ப வில்லை. அதனால், செங்கோட்டையனை முன்னிறுத்தி அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்தி ருக்க முயல்கிறது. அதிமுக பலவீனப்படுவது மக்களுக்கு விருப்பமில்லை. கட்சி தலைமை இதை உணர்ந்து புத்திசாலித்தனமாக செயல் பட வேண்டும்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவை பலவீனப் படுத்தியது போலவும், பீஹாரில் நிதிஷ் குமார் மற்றும் ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் நிலையை பாதித்தது போலவும், அதிமுகவையும் பாஜக பலவீனப்படுத்தி வருகிறது என்று குற்றம்சாட்டினார். அதே சமயம், நாட்டின் பொருளாதார நெருக்கடி யில் ஜிஎஸ்டி வரி குறைக்கப் பட்டதை வரவேற்கிறோம் என தெரிவித்தார்.
டிஜிபி அலுவலகம் முன்பு நடைபெற்ற மோதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. காவல்துறை அலுவலக வாசலிலேயே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவது மக்களி டையே தவறான எண் ணத்தை ஏற்படுத்தும்.
இது அரசுக்கு கெட்ட பெயரை தரக்கூடும். எனவே காவல் துறை, உளவுத்துறை கூடு தல் கவனம் செலுத்த வேண்டும் என தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார்.



