சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு விநாயகபுரத்தில் கருப்புசாமி கோவில் உள்ளது.இந்த கோவிலில் 25-ம் ஆண்டு அமாவாசை பெருவிழா நடைபெற்றது.
இதில் உலக மக்கள் நலன் கருதி பாலகிருஷ்ணன் அடிகளார் தலைமையில் விநாயகபுரம் சித்தர் டாக்டர் ஆறுமுகசாமி முன்னிலையில் 5,008 பக்தர்கள் பால்குடங்களை சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக காவிலுக்கு ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
அதன் பின்னர் கருப்புசாமிக்கு பாலாபி ஷேகம் நடந்தது.பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக் தர்கள் கலந்து கொண்டு சாமி. தரிசனம் செய்தனர்.தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக கோவிலில் சாமி வீதிஉலா,திருக்கல்யாண உற்சவம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை விநாயகபுரம் சித்தர் டாக்டர் ஆறுமுகசாமிகள் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.



