சென்னை எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் மரபணுக் குறைபாடான GATA2 முதன்மை நோயெதிர்ப்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த 33 வயதான ஜனனி என்ற பெண்ணுக்கு, உயிர்காக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை
வெற்றிகரமாகச் செய்துள்ளது.
இந்த பாதிப்பு நிலைக்கு உரிய சிகிச்சையளிக்கப்படா விட்டால், மையலோடிஸ் பிளாஸ்டிக் சிண்ட்ரோம் (MDS) போன்ற தீவிரமான எலும்பு மஜ்ஜை நோய்கள் உருவாகும் அபாயம் கணி சமாக அதிகரிக்கும்.
இந்த அறுவை சிகிச்சையை தலைமையேற்று நடத்திய, எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் ஹெமட்டோ-ஆன்காலஜி (இரத்தப் புற்றுநோயியல்) நிபுணர் டாக்டர் கோபி நாதன் கூறுகையில், “இந்த நோயாளி சுமார் 24 ஆண்டுகளாக GATA2 -தொடர்பான முதன்மை நோயெதிர்ப்பு குறைபாட் டுடன் வாழ்ந்து வந்தார்.
அவருடைய நேர்வில், நாங்கள் பாதியளவே பொருந்தக்கூடிய (ஹாப்லோஐடென்டிகல்) எலும்பு மஜ்ஜை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண் டோம்.
இதில் எலும்பு மஜ்ஜையை தானமாக வழங்கியவர், அவருடைய மர பணு பண்பியல்புகளில் 50% மட்டுமே நோயாளிக்குப் பொருத்தமானதாக இருந்தது.
இத்தகைய மருத்துவ செயல்முறைகள், தொழில்நுட்ப ரீதியாக சவாலானவை. அத்துடன், காசநோய் அல்லாத பூஞ் சைத் தொற்றை பரப்பியிருந்தது.
இந்த எதிர்மறை அம்சங் கள், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை குறிப்பிடத்தக்க அளவில் மிகவும் சவாலானதாக மாற்றியிருந்தன.
குறிப்பாக, கீமோதெரபி வழங்கும் போது, அவரது பாதிக்கப்பட்ட நுரையீரல் செயல்பாட்டின் காரணமாக அதை மிகவும் கவனமாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியிருந்தது” என்றார்.
இது குறித்து எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் டாக்டர் எம்.ஏ. ராஜா கூறுகையில், “GATA2 மரபணு மாற்றங்கள் உள்ள நபர்களில் சுமார் 70% நபர்களுக்கு, காலப்போக்கில் மையலோடிஸ் பிளாஸ்டிக் சிண்ட்ரோம் அல்லது அக்யூட் மைலாய்டு லுகேமியா என்ற புற்றுநோய் உருவாகிறது.
எனவே, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ஒரு சாத்தியமான தீர்வு என்ற அடிப்படையில் மிக முக்கியமானது. மேலும், இச்சிகிச்சை புற்றுநோயாக மாறும் நீண்ட கால அபாயத்தையும் குறைக்கிறது” என்றார்.



