கோவை மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகரில் சிம்பிள் எனர்ஜி நிறுவனத் தின் மின்சார ஸ்கூட்டர் விற்பனை ஷோரூம் (எக்ஸ்பீரியன்ஸ் மையம்) புதி தாக தொடங்கப்பட்டுள்ளது
இந்த உயர்தர விற்பனை மற்றும் சேவை மையத்தை, தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஏ. வேலுமணி திறந்து வைத்தார். விழாவில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் ஒன் ஜெனரல் 1.5 மற்றும் சிம்பிள் ஒன்ஸ் எனும் இரண்டு உயர் செயல்திறன் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வாகனங்கள் அதிக ரேஞ்ச், வேகமான சார்ஜிங் திறன் மற்றும் சிறந்த பயண அனுபவத்துடன் வடிவமைக் கப்பட்டு உள்ளன.
இது குறித்து சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் ராஜ் குமார், தைரோகேர் நிறுவனர் டாக்டர் ஏ.வேலுமணி ஆகியோர் கூறியதாவது:-
சிம்பிள் எனர்ஜி நிறுவனம், இந்தியா வின் தன்னிறைவு தொழில்நுட்ப வளர்ச்சிக் கான ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், கோவா, புனே, விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் கொச்சி போன்ற நகரங்களிலும் ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் செயல்படு கின்றன.
அடுத்த கட்டமாக, 2026 நிதியாண் டிற்குள் இந்தியா முழுவதும் 150 புதிய விற்பனை மையங்களை தொடங்க உள்ளோம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் ஒரு லட்சத்து 66 ஆயிரம் சிம்பிள் 1s ஸ்கூட்டர் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 999எனஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 8 ஆண்டுகள் வாரண்டி உண்டு.ஒரு முறை சார்ஜ் செய்தால் 248 கிலோமீட்டர் செல்ல முடியும்.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார் கள்.



