fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் 47 பேருக்கு வீடு கட்ட ஆணை: மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

நீலகிரியில் 47 பேருக்கு வீடு கட்ட ஆணை: மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட குந்தக்கோடுமந்து பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிரதம மந்திரி ஜென்மன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பெரட்டுதோல்மந்து, கீழ்கவகாடுமந்து, கக்கோடி மந்து, தலைப்பதேரிமந்து, கோவில்மந்து, துட்கோர் மந்து, ஏப்பகோடுமந்து, சின்னகாடிமந்து, நத்தனார் மந்து, மலைவீதிமந்து, ஆனைக்கல்மந்து, பகல் கோடுமந்து, காடிமந்து, கரியமந்து, துக்கார்மந்து, பிள்ளிமந்து ஆகிய பகுதிகளை சேர்ந்த 47 பயனாளிகளுக்கு ரூ.2.68 கோடி மதிப்பில் (தலா ரூ.5.70 லட்சம்) வீடு கட் டுவதற்கான அனுமதி ஆணைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட் டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நமது மாவட்டத்திலும் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த, அரசால் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட மந்து பகுதியில் இருக்கின்ற பொதுமக்களின் அடிப் படை வசதிகள் பார்வை யிட ஆனைக்கல் மந்து, குந்தக்கோடுமந்து உள் ளிட்ட மந்துப்பகுதிகளை நேரில் பார்வையிட்டோம்.

இந்த கிராமமானது மிகவும் ஒரு அழகான கிராமமாக உள்ளது. அடுத்த தலை முறையினரும் தங்களது பாரம்பரிய பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ளும் வகையில் நீங்கள் இருக்க வேண்டும்.


தங்களது மந்துப்பகுதியில் உள்ள குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பி அவர்களை உயர்கல்வி கற்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இன்று நடை பெறும் நிகழ்ச்சியில் நஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு மந்துகளில் உள்ள பொதுமக்களுக்கு பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின் கீழ் வீடு கட் டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனைக் கல்மந்து பகுதி யில் உள்ள அடிப்படை வசதிகளை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் கௌதம் (உதகை), உதகை வருவாய் கோட் டாட்சியர் சதீஷ், உதகை வட்டாட்சியர் சங்கர் கணேஷ், உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீ தரன் உட்பட பலர் உடனி ருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img