பிரம்மகுமாரிகள் மதுரை துணை மண்டல பொன்விழா மற்றும் தூத்துக்குடி கிளையின் மாணிக்கவிழா (19-07-2025) தூத்துக்குடி அழகர் மஹாலில் நடைபெற்றது. சிவாஞ்சலி நாட்டியாலயா குழுவினரின் நாட்டியம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அனைவரையும் தூத்துக்குடி கிளை நிலைய பொறுப்பாளர் பிகே.அருணா வரவேற்றுப் பேசினார். தியான அனு பவம் குறித்து விருதுநகர் மூத்த ராஜயோக ஆசிரியை ராஜயோகினி பி.கே.செல்வி உரையாற்றினார்.
துணை இயக்குநர் (பண்பு கல்விகள்) ராஜயோகி பிகே.ஜெயக்குமார் இயக்குநர் (பண்பு கல்விகள்) பிரம்ம குமாரிகள் அபு மலை, ராஜயோகி டாக்டர் பிகே.பாண்டியமணி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். பொன் விழா மோனோ கிராம் திறந்து வைக்கப்பட்டது.
இயக்குநர் (பிரம்ம குமாரிகள் துணை மண்டலம், மதுரை) ராஜ யோ கினி பிரம்மகுமாரி உமா ஆசியுரை வழங்கினார். தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி இரா.வசந்தி தலைமையுரை ஆற்றினார். பாதிரியார் பிஆர்.ஆல்பர்ட் சேவியர் (SHJ Founder, SMILE Organisation), ஜி.வேல் சங்கர்( முதல்வர் தி விகாசா பள்ளி), நாட்டார் ஆனந்தி (துணை இயக்குநர், தீயணைப்பு, மற்றும் மீட்பு துறை), கே.ஆனந்த ராமானுஜம் (CEO NLC TN POWER LTD) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பி.கே.சங்கரசுப்பு நன்றி கூறினார்.



