கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டா முத்தூர் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் அப்பகுதிகளில் முகாமிட்டு வீடுகளில் வைத்து இருக்கும் உணவுப் பொருட்கள், தோட்டத்தில் புகுந்து கால்நடைகளுக்கு வைத்து இருந்த தீவனங்கள் மற்றும் விவசாய பயிர்களை உண்டு சேதப்படுத்தி வரு வது தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
வனத் துறையினரும் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் கோயில் வளாகத்தில் வைத்து இருக்கும் கடை கள் மற்றும் உணவு கூடங்க ளுக்கு, அங்கு வரும் ஒற்றை காட்டு யானை உணவுப் பொருள்களை உண்டு சேதப்படுத்தி வந்தது. இதனால் பக்தர்களை பாதுகாக்க வனத்துறை யினர் நரசிம்மன் மற்றும் சின்னத்தம்பி என்ற இரண்டு கும்கி யானை களை அங்கு நிறுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் இருந்த கடைகளை சேதப்படுத்தி வந்த ஒற்றைக் காட்டு யானை அங்கு வருவதில்லை, இதனால் பக்தர்கள் நிம்மதியாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை சின்ன தடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஆறு யானை கூட்டம் ஒன்று சாலையை வேக மாக கடந்து வனப்பகுதிக்கு செல்லும் செல்போன் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.