fbpx
Homeபிற செய்திகள்கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு: கடலூர் கலெக்டர் தகவல்

கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு: கடலூர் கலெக்டர் தகவல்

கால்நடைகளுக்கு மானி யத்துடன் காப்பீடு செய்யலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மற்றும் அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட அழகியநத்தம். பாதிரிக்குப் பம், பகண்டை ஆகிய கிராமங்களில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டுக் கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத் தில் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் மானியத்தில் வழங்கப்பட்ட நாட்டுக் கோழி குஞ்சுகளை,நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:

மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில் ஏழ்மைநிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதர வற்ற பெண்களுக்கு 40 நாட் டுக்கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட் டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றி யம் ஒன்றுக்கு 100 பயனாளி கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றி யங்களுக்கும் 1,400 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 1,400 பய னாளிகளுக்கு 50 சதவீத அரசு மானியமாக ரூ.22 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

பகண்டை கிராமத்தில் கால்நடை வளர்ப்போருக்கு, கால்நடை இறப்பினால் ஏற் படும் இழப்பில் இருந்து பாதுகாக்க நாட்டின, கலப்பின, அயலின கறவை மாடுகள் மற்றும் எருமைகள், செம்மறி ஆடுகள், பன்றிகளை அன் றைய சந்தை விலைக்குரிய தொகைக்கு காப்பீடு செய்ய வும், கால்நடை காப்பீட்டுத் திட்டத்திற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தில்கால் நடைகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்யலாம். வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்க ளுக்கு 50 சதவீத மானியத்தி லும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் பழங்குடி யினர்களுக்கு 70 சதவீத மானி யத்திலும் காப்பீடு செய்யப் படும். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 பசு அல்லது எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து தரப்படும். இதன் மூலம் கால்நடை இறந்தால், தங்கள் கால்நடைகளுக்கு உரிய இழப் பீடு தொகை வழங்கப்படும். எனவே, கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விரும்பும் கட லூர் மாவட்டத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் அரு கில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img