வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நிறு வனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதனுக்கு கடந்த 9ம் தேதியன்று அமெரிக்காவின் நியூயார்க் கில் உள்ள ரோசெஸ்டர் தொழில் நுட்ப நிறுவனம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
கல்வியை விரிவுபடுத்து வதில் விசுவநாதனின் தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்திற் காகவும், பொருளாதாரத் தில் பின்தங்கியவர்களுக்கு ஆதரவளிப்பதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பிற் காகவும், ரோசெஸ்டர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் தலைமையதிகாரி டேவிட் முன்சன், கல்வி விவகாரங்களுக்கான பேராசிரியர் மற்றும் மூத்த துணைத்தலைவர் டாக்டர் பிரபு டேவிட், விஐடியின் வேந்தருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிலையில், விசுவநாதன், தனக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்காக ஆர்.ஐ. டி.க்கு நன்றி தெரிவித்தார்.
இந்த விழாவில், வி.ஐ.டி.யின் துணைத் தலை வர்கள் சங்கர் விசுவநாதன் மற்றும் முனைவர் சேகர் விசுவநாதன், துணை வேந்தர் முனைவர். காஞ்சனா பாஸ்கரன் மற்றும் சர்வதேச உறவுகள் இயக் குநர் முனைவர். ஆர்.சீனி வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.