“நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு” திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியளவில், கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் சட்ட மன்றத் தொகுதி. பீளமேடு பகுதி 3 திமுக. சார்பில் உடையாம் பாளையம் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி குமணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பீளமேடு பகுதிக்கழகம் – 3 செயலாளர் இரா.சேரலாதன் தலைமை தாங்கினார். பகுதி அவைத் தலைவர் சு.மதியழகன், பகுதி துணைச் செயலாளர்கள் சி.தண்டபாணி, எஸ்.நாகராஜ், ஆர்.மணிமேகலை, பொருளாளர் எஸ்.ரங்கனாதன், மாவட்ட பிரதிநிதிகள் சு.தனபால், உ.க.குழந்தைவேலு, கே.சின்னச் சாமி, வட்டக் கழகச் செயலாளர் கள் க.மணிகண்டன், மா.சிவக்குமரன்,
மாநகராட்சி உறுப்பினர்கள் கீதா சேரலாதன், அம்சவேணி மணி கண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி யில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோ.நோயல்செல்வம், இரா.மணிகண்டன், உ.கா.ராம சாமி, எஸ்டேட் கருப்புசாமி, இரா.செந்தில், பீளமேடு பகுதி இளைஞரணி அமைப்பாளர் த.சுபாஷ் மற்றும் நிர்வாகிகள், செயல்வீரர்கள் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.