திருச்சி மாவட்டம் – ஈச்சம்பட்டி, டிஇஎல்சி (TELC) இரட்சகர் தேவா லயத்தில், இ-காணிக்கை செலுத்தும் வசதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மே 9ம் தேதி துவங்கப்பட்டது.
தமிழக வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் எளிதாக நன்கொடை செலுத்துவதற்கு பல்வேறு நடைமுறைகள் வங்கிகளின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் ஈச்சம்பட்டியிலுள்ள, டிஇஎல்சி இரட்சகர் தேவாலயத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இ-காணிக்கை வசதியை, டிஇஎல்சி பி.சி. சேர்மன் ரெவரண்ட் எஸ்.தாமஸ் கென்னடி துவங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல உதவி பொது மேலாளர் தீபா செல்லம் தலைமை தாங்கினார். நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இ-காணிக்கை சேவையின் துவக்க நாளில் ஆலயத்திற்கு வந்த அனைவரும் கியூஆர் கோட்-ஐ பயன்படுத்தி காணிக்கை செலுத்தினர்.