கரூரில் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் நேற்று காலை வெளியானது.
இதன் காரணமாக பிளஸ் டூ தேர்வு எழுதிய ஒவ்வொரு மாணாக்கர்களும் தேர்வு முடிவுகளை அறிவதில் ஆர்வம் காட்டினர்.
இதில் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த முதல் மூன்று இடங்களை 10 மாணாக்கர்கள் பெற்று இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அவர்களை அழைத்து கரூர் சட்டமன்ற அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்தி முதல் இடத்தை பிடித்தவருக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.20, ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.