கோவை காந்திபுரம் பகுதி திமுக சார்பில் ராம்நகர் பட்டேல் ரோட்டில் “நாடு போற்றும் நான்காண்டு – தொடரட்டும் இது பல்லாண்டு” சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. காந்திபுரம் பகுதி திமுக செயலாளர் ஆர்.எம்.சேதுராமன் தலைமை தாங்கினார்.
67 வது வார்டு செயலாளர் கே.ராமநாதன், 68 வது வார்டு செயலாளர் எஸ்.போஸ், மாமன்ற உறுப்பினர்கள் வித்யா ராமநாதன், கமலாவதி போஸ், அவைத் தலைவர் மு.ராமமூர்த்தி, பகுதி துணைச் செயலாளர்கள் என்.நீலக்கண்ணன், என்.பழனிச்சாமி, எம்.கண்ணம்மாள், பொருளாளர் ஆர்.முருகதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் இரா.பாலு, பி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினார்.
கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் அ.ஜாகீர் உசேன் சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் மாநகர மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், பெரிய கடைவீதி பகுதி -1 திமுக செயலாளர் வி.ஐ.பதுருதீன், தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை சம்பத், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் வழக்கறிஞர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர் சுமா, வட்டச் செயலாளர்கள்
விஜயகுமார், மாநகர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் டெம்போ சிவா, தொண்டர் அணி தலைவர் ஆ.கண்ணன், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் கேசவன் மற்றும் பகுதி, வட்ட திமுக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.