கோவை ஆவாரம் பாளையம் திருவீசர் நகர் பகுதியில் உள்ள ஓடையின் இருபுறமும் குறுக்கே குழாய்களால் ஆன பாலத்தில் குப்பைகள், மற்றும் கழிவுகள் அடைத்து, சாக்கடை நீர் மற்றும் மழைநீர், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவிடுவதால், அதை சரிசெய்து தருமாறு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.
இதனைத் தெடர்ந்து மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாலத்தின் இருபுறமும் உள்ள குப்பைகள் மற்றும் குப்பைக் கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாகத் தெரிவித்தார்.
குழாய்களால் ஆன பாலத்தை அகற்றி விட்டு, ஓடை நீர் தடையின்றி வெளியேற, புதிதாக பாலத்தை உயர்த்திக் கட்ட உரிய முயற்சி செய்வதாகவும அவர் தெரிவித்தார்.
அப்போது பீளமேடு பகுதி -2 திமுக செயலாளர் மா.நாகராஜ், பகுதி பொருளாளர் ஆவை.சதீஷ், கேபிள் சேகர், எஸ்.டி.எஸ்.சரவணன், நாராயணசாமி, சக்திவேல், கர்ணன், ரங்கநாதன், பன்னீர்செல்வம், செல்லப்பா, டெய்லர் பழனிச்சாமி, கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.



