Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் : அமைச்சர் கீதா ஜீவன்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் : அமைச்சர் கீதா ஜீவன் அணிவித்தார்

முதலமைச்சர் ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அன்றைய தினம் பிறந்த 12 குழந்தைகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தங்க மோதிரங்கள் அணிவித்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவும், பழங்களும் வழங்கினார்.

அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகரத் துணைச் செயலாளர்கள் கனகராஜ், கீதா முருகேசன், வட்டச் செயலாளர்கள் சுப்பையா, பாலன், பாலு, கதிரேசன், கந்தசாமி, செந்தில்குமார், கங்கா ராஜேஷ், மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி, நாகேஸ்வரி, ஜான் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கோகுல், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, தகவல் தொழில்நுட்ப அணியின் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூப ராஜா, பகுதி இளைஞரணி அமைப்பாளர் . சூர்யா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img