கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் 7 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கழிவறை கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு பணியை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் பார்த்திபன், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் சரவணக்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் உள்ளனர்.



