fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி துணை கமிஷனர் கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம்

கோவை மாநகராட்சி துணை கமிஷனர் கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம்

தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிடுள்ளார்.


அதன் படி கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பதவி வகித்து வந்த ஷர்மிளா கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


கோவை மாவட்ட வருவாய் அலுவராக பதவி வகதித்து வந்த லீலா அலெக்ஸ் சென்னை வெளிவட்ட சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img