fbpx
Homeபிற செய்திகள்மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி பீளமேடு பகுதியில் மரக்கன்றுகள் நட்டார், திமுக செயலாளர் நா.கார்த்திக்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி பீளமேடு பகுதியில் மரக்கன்றுகள் நட்டார், திமுக செயலாளர் நா.கார்த்திக்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை யொட்டி, கோவை மாநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுடன மரக்கன்றுகள் நடப்பட்டும் வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 52 வது வார்டு, பீளமேடு, அண்ணாநகர் பகுதியில் மரக்கன்றுகளை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) நட்டு வைத்தார்.

இந்த நிகழ்வில், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பூர்ணசந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், பீளமேடு பகுதி 1 செயலாளர் துரை செந்தமிழ்ச்செல்வன், மாநில மாணவர் அணி துணைச்செயலாளர் கோகுல், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அக்ரி பாலு, துணை அமைப்பாளர் சிவமுருகேசன், சிங்கை சுந்தர், மகாலிங்கம், வட்டக்கழக செயலாளர் நாராயணன், மனோகர், சுந்தர்ராஜ், மாணிக்கம், ஆட்டோ வாசு, ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img