fbpx
Homeபிற செய்திகள்பட்ஜெட்டில் தொழில் வளர்ச்சிக்கு ரூ.2877 கோடி ஒதுக்கீடு- சிறு, குறு தொழில்கள் சங்கம் வரவேற்பு

பட்ஜெட்டில் தொழில் வளர்ச்சிக்கு ரூ.2877 கோடி ஒதுக்கீடு- சிறு, குறு தொழில்கள் சங்கம் வரவேற்பு

தமிழ்நாடு சிறு,குறு தொழில்கள் சங்கம் மாவட்ட துணை தலை வர் சுருளிவேல், தமிழ்நாடு பட்ஜெட் குறித்து கூறியிருப்பதாவது: சென்னை, கோவை மற்றும் ஓசூரில் தமிழ் நாடு தொழில்நுட்ப நகரம், கோவைக்கு மெட்ரோ ரயில், சிறப்புத் திட்டத்தின் மூலம் தொழில் 4.0க்கு ரூ.2877 கோடி ஒதுக்கீடு, தொழில் நகரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மொபைல் உதவி மையம், மூலதன மானியம் 300 கோடி மற்றும் கடன் உத்தரவாதம் 100 கோடி ஒதுக்கீடு, கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அறிவிப்பு, எம்எஸ்எம்இ.க்கு மொத்த ஒதுக்கீடு ரூ.911.50 கோடி போன்ற வைகள் வரவேற்கப்ப டுகின்றன.

கோரிக்கை

எம்எஸ்எம்இ துறைக்கு ரூ.1500 கோடி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஒதுக்கீடு குறைவாக உள்ளது. ஏற்கனவே கோவையில் ஒரு தொழிலாளர் தங்கும் விடுதி வரவிருக்கிறது, மற்ற மாவட்டங்களிலும் நாங்கள் கோரிக்கை விடுத்தோம் ஆனால் இது பற்றிய அறிவிப்பு இல்லை,

டி.ஐ.ஐ.சி. கட்டணங்கள் குறைக்கப்படவில்லை, வட்டி விகிதத்தை 6 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோரிக் கை விடுத்தோம் ஆனால் இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை,

2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரி தொடர்பான வழக்குகளுக்கு பொது மன்னிப்புத் திட்டத்தைக் கோரினோம், அது அறிவிக்கப்படவில்லை, இது ஏமாற்றம் தரும் அம்சங்களாக உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img