Homeபிற செய்திகள்‘பார்ட்னர் சூப்பர்’: அசோக் லேலண்ட் -நிறுவனம் அறிமுகம்

‘பார்ட்னர் சூப்பர்’: அசோக் லேலண்ட் -நிறுவனம் அறிமுகம்

இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவ னமும், இந்தியாவின் முன்னணி வணிக வாகன உற்பத்தி நிறுவனமுமான அசோக் லேலண்ட் [Ashok Leyland,] புதிய நடுத்தர (இடைநிலை) வணிக வாகனத்தை (ICV) ‘பார்ட்னர் சூப்பர்’ [Partner Super] என்ற பெயரில் 914, 1014 மற்றும் 1114 என்ற மாடல்கள் முறையே 9.15 டன், 10.25 டன் மற்றும் 11.28 டன் மொத்த வாகன எடைப் பிரிவில் (நிக்ஷிகீ) அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாகனம், ஓட்டுநருக்கு சிறந்த வசதியையும், சௌகரியத்தையும் வழங்குவதற்காக, தற்காலத்துக்கு ஏற்ற சாய்வு-திறன் கொண்ட டில்ட்-ஏபிள் டே கேபினுடன் [tilt-able day cabin]வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பிரிவிலேயே சிறந்த எடைத் திறனைக்[payload capacity] கொண்டுள்ளது. பார்ட்னர் சூப்பர் வாகனம், சிறந்த மைலேஜைத் தரக் கூடியது.

இ-காமர்ஸ், குளிர் பானங்கள், எஃப்எம்சிஜி, வைட்குட்ஸ் எனப்படும் குளிர்சாதனங்கள் போன்ற மின்சாதனப் பொருட்கள், பார்சல்கள், பழங்கள் [e-commerce, beverage, FMCG, whitegoods, Parcel, Fruits] போன்ற சுமை ஏற்றும் பயன்பா டுகளில் வாடிக்கையாளர்களின் தேவைகளை வாடிக்கையாளர்களின் எதிர் பார்ப்புக்கேற்றவகையில் பூர்த்தி செய்யும்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வாகனப் பிரிவுத் தலைவர் சஞ்சீவ் குமார்

இதற்கான நிகழ்ச்சியில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வாகனப் பிரிவுத் தலைவர் சஞ்சீவ் குமார் பேசியதாவது: வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் வாடிக்கையாளர்களின் மொத்த உரிமையாளர் செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் வகையில் இந்தப் பிரிவில் சிறந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் பாரம்பரியத்தை அசோக் லேலண்ட் கொண்டுள்ளது.

இந்தப் பிரிவில் வாகனத் தயாரிப்பை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நடுத்தர (இடைநிலை) வணிக வாகனப் பிரிவில் எங்கள் தயாரிப்புகளை விரிவுபடுத்துகிறோம்.

அந்த முயற்சியில், ஒரு பகுதியாக ’பார்ட்னர் சூப்பர்’ என்ற இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். மாறுபட்ட வகைத் தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் உலக அளவில் சிறந்த, முதல் 10 வணிக வாகன உற்பத்தியாளர் நிறு வனங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை உறுதி செய்ய இந்த வேகத்தில் செயல்பாடுகளைத் தொடர விரும்புகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img