மருத்துவத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் விஎஸ் மருத்துவமனை முதியோருக்கான புற்று நோயியல் பிரிவை பிரத்யே கமாக தொடங்கியுள்ளது.
இது தென்னிந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த முதியோர் புற்று நோயியல் பிரிவாகும்.
வி.எஸ்.குழும மருத்து வமனையின் நிறுவனத் தலைவர் மற்றும் நிர் வாக இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியன் பேசி யதாவது:
புற்றுநோய் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு வயது வித்தியாசமின்றி அதிகரித் துள்ளது.
அதிலும் குறிப் பாக 65 வயதுக்கு மேற் பட்டவர்களுக் குத்தான் புற்றுநோய் பாதிப்பு தெரிய வருகிறது. முதியவருக்கான நோய் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் மிகப் பெரும் சவாலாக உள்ளது.
சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ ரீதி யான சிக்கல்களை தீர்க் கும் பாலமாக முதல் முறையாக முதியோர் புற்றுநோயியல் பிரிவு, விஎஸ் மருத்துவமனையில் பிரத்யேகமாக தொடங்கப் பட்டுள்ளது.
இப்பிரிவானது முதியோருக்கான சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் வி.எஸ். நட ராஜன் தலைமையில் செயல்படும். புற்றுநோய் பாதிப்புக்குள்ளான முதியோருக்கு அனைத்து வகையான தீர்வுகளை ஒருங்கிணைந்த வகையில் அளிக்கும் மையமாக இது திகழும் என்றார்.
முதியோருக்கான புற்றுநோயியல் பிரிவை பேராசிரியர் டாக்டர் வி.எஸ். நடராஜன் திறந்து வைத்து பேசும்போது, புற்றுநோய் சார்ந்த மருத்துவ பரிசோதனைகள் பெரும்பாலானவை முதியவர்களுக்கு சோதிக் கப்படாமலே உள்ளன. இதனாலேயே இத்தகைய புற்றுநோய் பாதித்த முதியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சிரமமா னதாக உள்ளது என்றார்.
வி.எஸ்.மருத்துவமனை யின் முதியோருக்கான புற் றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ். ஜகதீஷ் சந்திர போஸ், முன்னிலை வகித்து பேசும்போது, உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உயிர் பிழைப்போர் விகிதம் இந் தியாவில் மிகக்குறை வாக உள்ளது.
புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்ட றிவதில் ஏற்படும் தேக்க நிலை அதிலும் தீவிரமாக பாதிக் கும் புற்றுநோயைக் கண்டறியாமல் விடுவதும் இதற்குக் காரணமாகும் என்றார்.
சுதந்திர போராட்ட வீரர் லட்சுமி காந்தன் பாரதி ஐஏஎஸ் (ஓய்வு), பேராசிரியர் டாக்டர் எஸ். சுந்தர், இணைப்பு மாற்று மற்றும் கட்டி அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ இயக்குநர், விஎஸ் குழும மருத்துவமனை மற்றும் முத்து சுப்ரமணியன், செயல் இயக்குநர், விஎஸ் குழும மருத்துவமனை ஆகியோர் பங்கேற்றனர்.



