ஹுரைரா கேர்(HURAIRA CARE) என்ற வாட்ஸ்அப் குழுவில் இருந்து துவங்கப்பட்ட கேட் ஷோ நடத்திய பூனைகளுக்கான போட்டி காணொளி நேரலையில் 2 நாட்கள் நடந்தன.
இதில் இந்தியன், பெர்சியன் மற்றும் எக்ஸோடிக் பூனைகள் நேர லை காணொளி மூலம் காட்சிப்படுத்தப்பட்டன. தமிழகத்தில் கோவிட் பாதுகாப்பு கருதி நேரலை யின் மூலம் ஹுரைரா கேர் நிறுவனர்கள் எஸ்.ஐ. முகமது ரப்பானி, எஸ். சரவணன் ஆகியோர் நட த்தினர்.
மொத்தம் 40 பூனைகள் பங்கேற்றன. ஊட்டி சரவணன், ஈரோடு முகமது ரப்பானி, பெங்களூர் சிவபிரசாத் ஆகியோர் நடுவர்களாக இருந்து, பூனைகளை நான்கு பிரிவுகளாக தேர்வு செய்தனர்.
போட்டியில் டிரெடிஷனல் லாங் ஹேர் பிரிவில், லோகேஷ் மும்மூர்த்தியின் (கோவை), போம்மி 1-வது இடத்தைத் தட்டிச் சென்றது, உமா மகேஷ்வரனின் (கோவை) ரேஸ் 2-வது இடம், நக்குலா ஸ்ரீ (ஈரோடு) தூரிகா 3-வது இடம், செந்தில் ரவிச்சந்திரன் (ஈரோடு) லட்டு 4-வது இடம், அலிப் அப்துல் காதிர் (திருச்சி) மைலோ 5-வது இடத்தையும் பெற்றன.
பெர்சியன் மற்றும் எக்ஸோடிக் பிரிவில் ஷா ஜியாவின் (சென்னை) ஹஸ்கி 1-வது இடத்தைத் தட்டிச்சென்றது. நூரூதினின் (சென்னை) மார்கோ ஜூனியர் ஹன் டர்-2-வது இடம், செந்தில் ரவிச்சந்திரனின் (ஈரோடு) க்யுன்னா 3-வது இடம், சிக்கந்தர் (புதுக்கோட்டை) பிட்டு 4-வது இடத்தை தட்டிச் சென்றன.
காட்சிக்கு வந்த பூனைகளில் அனைத்து பிரிவிலும் சிறந்த இரு பூனைகளுக்கு, ஷோ பெஸ்ட் ஆப் பெஸ்ட் விருது வழங்கப்பட்டது. இதில் ஷாஜியாவின் (சென்னை) ஹஸ்கி, ஹரிஷின் (கோவை) சிம்பா ஆகியவை முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன.
நடுவர் விருப்பம் பிரிவில் பஷாரத் மஹ்மூத்தின் (திருப்பூர்) ஃபெரான் (இந்திய பூனை), செரின் ரேஷ்மாவின் (கோவை) பெப்பர் பரிசுகளை தட்டிச் சென்றன.
அனைத்து பங்கேற் பாளர்களுக்கும் நினைவுப் பரிசு, சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் அவர்களது முகவரிக்கு அனுப்பப்பட்டன.



