10 லட்சம் மாணவர்கள் சிறப்பாகப் படிக்கவும் வேலை பெறவும் வைக்கும் நோக்கத்துடன், கேரியர் லேப்ஸ் (Career Labs) நிறுவனம் திருநெல்வேலியில் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் அதிவே கமாக வளர்ந்துவரும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான கேரியர் லேப்ஸ், மற்ற நிறுவனங்களைப் போல் இல்லாமல் மாறுபட்ட பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை இந்திய நகரங்களில் திறமை யாளர்களைக் கண்டறியத் தயாராகியுள்ளது.
அந்த வகையில் முதல் முயற்சியாக தனது ஆராய்ச்சி-மேம்பாட்டு மையத்தை திருநெல்வேலியில் அமைத்துள்ளது. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகர ங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலை பெறுவதற்கு உதவும் வகையில் கேரியர் லேப்ஸ் உயர்தர பயிற்சியளித்து வருகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த நகரங்களிலிருந்து தனது நிறுவனத்துக்கு ஆட்களைச் சேர்த்து கேரியர் லேப்ஸ் முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
“உலக அளவில் போட்டிமிகுந்த தயாரிப் புகளை வழங்க எந்த இடத்திலிருந்து வேலை பார்க்கிறோம் என்பது இனிமேல் ஒரு தடையே அல்ல. உள்ளூர் திறமையா ளர்கள் உயர்தரத் தொழில் நுட்பப் பணிகளில் பணி யாற்ற ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
கேரியர் லேப்ஸ்சைப் பொறுத்தவரை இந்திய £வில் தொழில்நுட்ப மைய நகரங்களுக்கு வெளியே தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்வதில் இது முதல் படி” என்கிறார் ஜெபாஸ்டின் பிரபாகரன்.
2021 நவம்பரில், திருநெல்வேலி ஆராய்ச்சி-மேம்பாட்டு மையம் 10 பேருடன் செயல்படத் தொடங்கியது. தற்போது 50 பேர் பணிபுரிகிறார்கள்.
அனைவருமே இந்தப் பகுதி கல்லூரிகளில் படித்தவர்கள். மேலும் 30 பேர் புதிதாகச் சேர்க்கப் படவுள்ளார்கள். உலகத் தரமான வேலையை சொந்த ஊரிலேயே பெற இந்த முயற்சி உதவுகிறது.



