Home தமிழ்நாடு கல்லீரல் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கல்லீரல் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

உலக கல்லீரல் தினம், ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, மக்களிடைய கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், உடலின் முக்கிய உறுப்புகளுள் ஒன்றான கல்லீரலை பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.

முதுகெலும்பு உள்ள உயிரினங்கள் மற்றும் சில விலங்குகளின் உடலில் காணப்படும் ஒரு முக்கிய உள்ளுறுப்பே கல்லீரல்.

மனிதர்களைப் பொறுத்தவரை பித்தப்பை மற்றும் இரைப்பை போன்றவற்றின் அருகே உள்ள இந்த கல்லீரல் மார்புக்கூட்டில் இருந்து வலது கீழ்புறமாகவும் வயிற்றுப் பகுதியில் வலது மேல் பக்கத்திலும் காணப்படுகிறது. கல்லீரல், உடலில் உள்ள உள்ளுறுப்புகளில் மிகப்பெரியது மட்டுமல்ல மிகப்பெரிய நீரமம் சுரக்கும் சுரப்பியும்கூட.

உடலில் உள் பகுதி அமைப்பைக் கட்டுப்படுத்தி சமப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறுவிதமான செயல்பாடுகளை சீராகச் செய்யக்கூடியது கல்லீரல். மேலும் வளர்சிதை மாற்றம், ஹார்மோன் உற்பத்தி உள்ளிட்ட முக்கியமான சில பணிகளைச் செய்கிறது. துணை செரிமான சுரப்பியாகவும், பித்தநீரை உருவாக்கவும் செய்கிறது.

மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்ற முறையில் ஹீமோகுளோபினை உடைத்து பிலுருபின் என்னும் புரதத்தை உருவாக்க உதவுகிறது.

இப்படி பல்வேறு பணிகளை சிறப்பாகச் செய்யும் கல்லீரல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதேவேளையில் ஏதோ ஒரு சூழலில் காயப்பட்டால் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தது என்றாலும் அதிக உடல் பாதிப்புகள், ஆல்கஹால் போன்றவை கல்லீரலை மிகவும் சோர்வடையச் செய்துவிடும்.

மது அருந்துவது மற்றும் ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலை தாக்குவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. அதிக சர்க்கரையும் கூட கல்லீரலை பாதித்துவிடும்.

ஹெபடைட்டிஸ் கிருமிகள் மட்டுமல்ல கொரோனா வைரஸ் கிருமிகள்கூட கல்லீரலை பாதிக்கின்றன. சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் நோய் குணமானநிலையில் அவர்களுக்கு கல்லீரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கல்லீரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 50 சதவீதம் பேருக்கு மிதமான அளவு கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கொரோனா வைரஸ் எப்படி கல்லீரலை பாதிக்கிறது என்பதற்கான முழுமையான காரணம் தெரியவில்லை.

ஆனால், கல்லீரலில் கொழுப்பு சேர்வதாலோ அல்லது பேட்டி லிவர் எனப்படும் கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் இருந்தால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இன்றைக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளான பலர் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதைப் பார்க்க முடிகிறது. எனவே கல்லீரலை மிக கவனமாக பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

கல்லீரலை வலுப்படுத்தும் அதேவேளையில் லிவர் ஃபங்ஷன் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும். HAV Igm, Anti HCV, HBs Ag உள்ளிட்ட பரிசோதனைகளையும் செய்து பார்க்க வேண்டியது அவசியமாகும். அதன்பிறகு மருத்துவர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கல்லீரல் தனது பணியை செய்யத்தவறும்போது வெளிப்படும் அறிகுறிகளைக் கொண்டு கல்லீரலை கவனிக்காமல் விட்டுவிட்டால் முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டு முழுமையாக செயலிழந்து உடலின் பல பாகங்கள் செயல்படாமல் போய்விடும். எனவே கவனம் தேவை.

கல்லீரலைப் பாதுகாக்க நிறைய வழிமுறைகள் உள்ளன. சுகாதாரமற்ற நீர் அருந்துவது, நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை வைரஸ் தாக்குதல் ஏற்படக் காரணமாகின்றன.

அடிப்படையில் உணவு, நீர் விஷயத்தில் கவனம் செலுத்தினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் விரும்பிய உணவுகளை விரும்பிய நேரத்தில் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்து உடல்பருமனைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். அதேவேளையில் மருத்துவர்களின் ஆலோசனை மிக முக்கியமாகும்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கொண்டிருப்பதுடன் அறவே மதுவை தொடாதவராக இருந்தாலும்கூட மன அழுத்தம் `கொழுப்பு கல்லீரல்’ என்னும் பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

மன அழுத்தம் உள்ளவருக்கு சில ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து கல்லீரலில் கொழுப்பைச் சேர்த்துவிடும். இதேபோல் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் முதல்கட்ட கொழுப்பு கல்லீரல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

அதாவது சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இன்சுலின் சரியாக சுரக்காது என்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாமல் போவதுடன் தேவைக்கு, அதிகமாக கொழுப்பு அமிலங்கள் ரத்தத்தில் தேங்கிவிடும்.
செரிமானக் கோளாறில் தொடங்கி வயிற்றுவலி, வயிறு உப்புசம், வாந்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி இருக்கலாம். எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அப்போது காமாலை நோய் வர வாய்ப்புள்ளது. உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும் கல்லீரல் பாதிப்பை அறிந்து அதற்கேற்ற சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். ஒவ்வொருவேளை உணவுக்கு முன்பும் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு டம்ளர் நீரில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் கலந்து தினமும் இரண்டுதடவை குடிக்கலாம். இதேபோல் வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிடலாம்.

மஞ்சள், கீரை, கேரட் ஜூஸ், பப்பாளிப்பழம் போன்றவையும் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
இவை அனைத்துக்கும் மேலாக மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியம். கல்லீரலைக் காப்போம்.
கட்டுரையாளர்:

Dr. Neelamekam Thoppa Kapali,
HOD-Surgery-Gastro & Minimal Access Surgery
Fortis Malar Hospital, Chennai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...