Home பிற செய்திகள் கோவை எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கல்லூரியில் திறனறி போட்டிகள்

கோவை எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கல்லூரியில் திறனறி போட்டிகள்

கோவை சரவணம் பட்டி டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான Brain fest 2021 எனும் பல்துறை திறனறி போட்டிகள் நடைபெற்றது. ஆன் லைன் வழியாக நடைபெற்ற இதில் சிறந்த மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.


கோவை சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி சார்பாகபல்துறை திறனறி போட்டிகள் கடந்த 7ம் தேதி துவங்கி ஆன்லைன் வழியாக நடைபெற்றது இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து சுமார் 100 பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.


எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் தலைவர் முனைவர் சுப்ரமணியன், தாளாளர் மருத்துவர் ராஜலட்சுமி மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் முனைவர் நளின் விமல் குமார் ஆகியோரின் ஆலோசணையின் படி நடைபெற்ற இதில், பொது அறிவு, ஆங்கில புலமை, பகுத்தறிவு, வீடியோ படங்களில் உள்ள வடிவமைப்பு திறன், படைப்பு திறன், மற்றும் செறிவூட்டல் போன்ற திறன்களின் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் சிறந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதன்மை செயல் அதிகாரி முனைவர் டேனியல், மற்றும் முதல்வர் முனைவர் பிரேம் நசீர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில், எம்.பி.ஏ. இயக்குனர் முனைவர் ஞானசேகரன் மற்றும் துணை முதல்வர்கள் முனை வர் அனிதா, முனைவர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


நிகழ்ச்சியில், தகவல் தொழில் நுட்ப துறைத்தலைவரும் விழா ஒருங்கிணைப்பாளருமான முனைவர் வைதேகி உட்பட கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மெர்கன்டைல் வங்கி ரூ.3 கோடி நிதி

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் அதன் இயக்குநர்கள் நிரஞ்சன் சங்கர் மற்றும் டி.என்.நிரஞ்சன் கனி, துணை பொது மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் சந்தித்து,...

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.10 கோடி வழங்கியது

கொரானோ நோய்த்தடுப்பு பணிக்காக சன் குழுமம் சார்பில் அதன் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். முதலமைச்சர்...

டேன்டீ தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலக கூட்டரங் கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந் திரன் தலைமையில், வனத்துறை சரக அலுவலர்கள் மற்றும் டேன் டீ அலுவலர்கள் ஆகியோரு டனான ஆய்வுக்...

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை சில்க்ஸ் வழங்கிய ஆம்புலன்ஸ்கள்

கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு...

தேவையின்றி வெளியே சுற்றினால் நடவடிக்கை: புதிய போலீஸ கமிஷனர் தீபக் தமோர் எச்சரிக்கை

கோவையில் தேவை யின்றி வெளியே சுற்று வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷ னர் எச்ச ரிக்கை விடுத்துள் ளார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி...