Home தலையங்கம் சபாஷ், கலெக்டர்!

சபாஷ், கலெக்டர்!

பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் கோவை புதிய கலெக்டர் நாகராஜன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பொதுமக்கள் இவரின் உடனடி நடவடிக்கையை பாராட்டுகின்றனர். சபாஷ், கலெக்டர்!
உங்கள் நடவடிக்கையைத் தொடர்ந்து கோவையில் நேர்மையான தேர்தல் நடக்கட்டும்.


கோவை கலெக்டராக சென்ற வாரம் கலெக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டார். திறமையும் அனுபவமும் உள்ள கலெக்டர் நாகராஜன் அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் தரும் புகார்களை உடனுக்குடன் கவனித்து வருகிறார்.


கோவை வடக்கு, தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் பரிசு பொருட்களும், பணமும் விளை யாடி வந்தன. அரசியல் கட்சிகள் பரிசு பொருட்களை வீட்டின் கதவில் மாட்டிச் செல்கின்றனர்.


இதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர்.
இந்த சூழலில் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் கடந்த 19ம் தேதி பரிசு பொருட்கள் பட்டுவாடா தொடர்பாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் புகார் கிடைத்தும் பறக்கும்படை அதிகாரி வெள் ளிங்கிரி தலைமையிலான குழுவினர் தாமதமாக சென்றுள்ளனர். இந்த நிலையில் பறக்கும் படை அதிகாரி வெள்ளியங்கிரி அவருடன் பணியில் இருந்த காவலர்கள் பிரசாத், குமாரவேல் ஆகியோர் பணியில் அலட்சியமாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் பிறப்பித் துள்ளார். கலெக்டரின் துரித நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டுகின்றனர். தொடரட்டும் கலெக்டரின் அதிரடி நடவடிக்கைகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகுபடுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...

தூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

கோவை ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பணி...