Home தமிழ்நாடு கொடிவேரி, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக அரசு பெருந்துறை அதிமுக வேட்பாளர்...

கொடிவேரி, அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக அரசு பெருந்துறை அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பிரசாரம்

பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாசம்மாவூர், கல்லுக்கடை காலனி, நடுவலசு,நல்லாம்பட்டி நகரம், நல்லாம்பட்டி மாரியம்மன் கோவில், நல்லாம்பட்டி காலனி, ஜே ஜே நகர்,பெத்தாம்பாளையம், ஓசப்பட்டி பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தார்.

அப்போது பொதுமக்களிடையே அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பேசியதாவது:
கடந்த பத்து ஆண்டுகளாக பெருந்துறை பகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்து வளர்ச்சி பெற வைத்தது அம்மா அரசும் எங்கள் எடப்பாடியார் அரசும் தான்.

தற்போது பயன்பாட்டிற்கு வர உள்ள கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம் உள்ளிட்டவை எடப்பாடியார் அரசால் மக்களுக்கு வழங்கப்பட்ட திட்டம். இதை எந்த தனி மனிதனும் சொந்தம் கொண்டாட முடியாது.

இந்த திட்டங்களை தான் கொண்டு வந்ததாக யாராவது பிரச்சாரம் செய்தால் அதனை பொதுமக்கள் நம்ப தேவையில்லை.

மேலும் இது போன்ற ஏராளமான பணிகள் பெருந்துறைக்கு கொண்டு வரவேண்டுமெனில் கழகம் அறிவித்த வேட்பாளராகிய எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீன்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைய ஒத்துழைக்க வேண்டும்.

வருடம் தோறும் ஆறு சிலிண்டர்கள், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1500 உதவி தொகை, மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை பெற நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தின் போது ஒன்றியச்செயலாளர் விஜயன் (எ) ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுசாமி, யூனியன் சேர்மன் சாந்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகுபடுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...

தூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

கோவை ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பணி...