Home தமிழ்நாடு பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: கிராண்ட் மாஸ்டர் இனியன் வெள்ளிப்பதக்கம் வென்றார்

பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: கிராண்ட் மாஸ்டர் இனியன் வெள்ளிப்பதக்கம் வென்றார்

ஈரோடு மாவட்டத்தில் இருந்து குறைந்தது இரண்டு விளையாட்டு வீரர்களை சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வைத்து பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதை தனது நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது “ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன்”.

அதன்படி, பா.இனியன் என்ற மாணவனை தேர்வு செய்து கடந்த 5 ஆண்டுகளாக அபுதாபி, ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்லோவேனியா, ஸ்பெயின், பிரான்ஸ், அண்டோரா, மலேசியா, துர்க்கி, ஸ்விட் சர்லாந்து, செக் குடியரசு, போன்ற நாடுகளுக்கு சென்று பிலிட்ஸ் செஸ் விளையாட்டில் கலந்துகொள்ள ஒளிரும் ஈரோடு அமைப்பு சுமார் ரூ.35 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது.

இதன்மூலம் பா.இனியன் மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று, ஈரோடு மாவட்டத்தின் முதல் கிராண்ட் மாஸ்டர் மற்றும் இந்தியாவின் 61வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள் ளார்.
தற்போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான முதலாவது உலக ஆன்லைன் பிலிட்ஸ் சாம்பியன்ஷிப்பில் 84 நாடுகளைச் சார்ந்த 960 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடித்த 8 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பா.இனியன் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக பங்கேற்றார். லீக் சுற்றின் ‘ஏ’ குரூப்பில் இடம் பெற்றிருந்த இனியன் 10 சுற்றுகளில் விளையாடினார்.

இதில் அமெரிக்கா, உக்ரைன், பல்கேரியா, போலந்து வீரர்களை தோற்கடித்ததோடு, குரோஷியாவின் வீரரை சமன் செய்தார்.

இதன் மூலம் 8.5 புள்ளிகளுடன் தனது குழுவில் முதலிடத்தை பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த இறுதிப் போட்டிக்கு பா.இனியனுடன் ரஷ்யா, அர்மேனியா, சீனா, ஜார்ஜியா, இந்தோனேசியா நாடுகளின் 8 வீரர்கள் ஆல் -பிளே- ஆல் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய வீரர் இனியன் மட்டுமே.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் முடிவில் 5.5 புள்ளிகள் பெற்று பா.இனியன் முதலிடத்தை சமன் செய்தார்.

ஆனால் டை பிரேக்கர் முறையில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த உலக சாம்பியன்ஷிப் ஆனது இனியனிற்கும், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கும் ஒரு சிறந்த தருணமாக அமைந்தது.

வெற்றி பெற்ற இனியனுக்கு ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகுபடுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...

தூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

கோவை ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பணி...