கோவை, ஈரோடு, திருப்பூரில் 90 சதவீததத்திற்க மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை கோட்டத்தில் மொத்தம் 951 பஸ்கள் உள்ளன.
உக்கடம், சுங்கம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இன்று காலை முதல் இயக்கப்படுகின்றன.
மீதமுள்ள பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். அரசு போக்குவரத்து கழகம் (கோவை மண்டலம்) அதிகாரிகள் கூறுகையில், ‘எல்பிஎப் தொழிற்சங்கம் மற்றும் இதர வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாத தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்கள், நடத்துனர்களை வைத்து முழுமையாக பஸ் இயக்கப்படும்.
வேலை நிறுத்தம் தொடரும் பட்சத் தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற வெளி ஓட்டுனர்கள் பட்டியல் பெறப்பட்டு அனைத்து பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் பட்சத்தில் ஓய்வு பெற்ற ராணுவ ஓட்டுனர்கள் வைத்து இயக்கவும் நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றனர்.