Home தமிழ்நாடு கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டி

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டி

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டுச் சங்கம் மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மாற்றுத்திற னாளிகளுக்கான தடகளம் மற்றும் நீச்சல் போட்டிக்கு 12ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக் கப்பட்டுள்ளது.


மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளு க்கான மாநில அளவிலான தடகள மற்றும் நீச்சல் விளை யாட்டு போட்டிகள், வரும் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறுகிறது.


மாநில அளவிலான தடகள மற்றும் நீச்சல் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் அனை வருக்கும் தங்கும் வசதி, உணவு மற்றும் கோவை பஸ் நிலையம், ரயில்வே நிலையம் ஆகிய இடங்களில் இருந்து போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.


மேலும், பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா விளையாட்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.


மாநில அளவிலான தடகள மற்றும் நீச்சல் விளையாட்டு போட்டியில் முதல் இடத்தை பிடித்தாலும், தேசிய அளவிலான தடகள போட்டிக்கு (PCI) Minimum Qualified Standard தகுதி பெறும் மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகளுக்கு மட்டும் தேசிய அளவிலான தடகள போட்டிக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டையினை அவசியம் கொண்டு வர வேண்டும்.

எனவே, இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 12.02.2021 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்ப படிவங்களை tamil nadupar asports@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி சக்திவேல் மேற்பார்வையில், கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பி. ஆர்.அருள் மொழி தலைமையில் இன்று (14ம் தேதி) நடைபெற்றது.

கோவை வேளாண் பல்கலை. பட்டம் பெற விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் பெறுவதற்கு விண்ணப் பிக்ககால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழ கத்தின் 42 ஆவது பட்டமளிப்பு...

ஆக்சிஜன் செறிவூட்டி நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சும்மிட்ஸ் ஹைகிரானிக்ஸ் நிறுவன பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் செறிவூட்டி நிலையத்தினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி...

வழக்கறிஞர் புஷ்பானந்தம் தலைமையில் 1000 பேருக்கு முக கவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

கோவை தடாகம் ரோடு சிவாஜி காலனி பஸ் நிறுத்தத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில் 1000 பேருக்கு முக கவசமும் 1000 பேருக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது....

நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பில் 25 ஏழைகளுக்கு மளிகைப் பொருட்கள் மலைகிராமத்தில் வழங்கப்பட்டது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா போதூர் என்ற இருளர் இன மக்கள் வாழும் மலை கிராமத்தில் நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட 25 ஏழை குடும்பங்களுக்கு...