Home பிற செய்திகள் கோவையில் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்

கோவையில் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்

தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை பிகே புதூர் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி வயது (40) இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ரங்கசாமி என்பவர் நிரந்தர துப்புரவு பணியாளராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சீத்தாலட்சுமி என்ற மகப்பேறு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று தன்னுடைய வீட்டிற்கு வந்த அவர் வீடியோ மூலம் வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளார் .அதில் மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பணியை பார்த்து வந்தவர் மற்றும் அங்கு பணிபுரியும் செவிலியர் ஆகிய இருவர் தனியாக ஒரு அறையில் இருப்பதை பார்த்ததாகவும் ,இதனை பழி வாங்கும் நோக்கில் செய்யாத தவரை செய்ததாக மேலிடத்தில் புகார் செய்து அவமானப்படுத்தியதாகவும், மேலும் தனது வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் ,தற்கொலைக்கு காரணமாக இருந்த 3 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரங்கசாமி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார்.

தற்போது இந்த தற்கொலை வீட்டியோவானது வைரலாகி வருகிறது.இதுவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி உடலை வாங்க மறுத்த உறவினர்கள் அரசு மருத்துவ பிரேத கிடங்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அங்கு வந்த போலீசார்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

பாரெவர்மார்க் ஐகான் புதிய வைர நகை கலெக்ஷன்

டி பியர்ஸ் குழுமத்தின் வைர பிராண்டான பாரெ வர்மார்க், பாரெவர்மார்க் ஐகான் ல் கலெக்ஷன்ஸை அறிமுகப்படுத்துகிறது. இது இந்த பிராண் டின் தனித்துவமான ஐகான் ஆகும்....

கோவையில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தகவல்

கோவையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் விகிதம் குறைவாகவே உள்ளதாகவும், தாமதமான சிகிச்சையே உயிரிழப்புக்கு காரணம் என்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். கோவை...

உலக கல்லீரல் தினம் – விஜிஎம் மருத்துவமனையில் பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட் எக்ஸாம் அண்டு பாட்கேப் கருவி அறிமுகம்

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கோவை, திருச்சி சாலையில் அமைந்துள்ள வி.ஜி.எம். மருத்துவமனையில் புதியதாக தென்னிந்தியாவில் முதன்முறையாக “பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட்; எக்ஸாம் அண்டு பாட்கேப்” என்னும்...

டெய்ரி டே அறிமுகம் செய்யும் ஐஸ்கிரீம் கேக்குகள் தொகுப்பு

இந்தியாவில் முதன் மையான 10 ஐஸ்கிரீம் பிராண்டுகளில் ஒன்றான டெய்ரி டே, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மஹா ராஷ்டிரா, கோவா மற்றும் பாண்டிச்சேரியின் விரிவான வணிகத்தைக் கொண்டிருக்கிறது.

கல்லீரல் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

உலக கல்லீரல் தினம், ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, மக்களிடைய கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், உடலின் முக்கிய உறுப்புகளுள் ஒன்றான கல்லீரலை...