முமாச அறக்கட்டளை சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து 64 அணிகள் சார்பில் 960 வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் கோவையை சேர்ந்த யுசிசிஎம்டிஎஸ் அணி வெற்றி பெற்றது. திருப்பூரை சேர்ந்த எம்சிசி அணி இரண்டாம் இடம் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா கோவை கொடிசியா மைதானத்தில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையிலும், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முமாச.முருகன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், திருச்சி கிழக்கு மாவட்ட பொறுப் பாளரும், சட்டமன்ற உறுப்பி னரு மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரம், முமாச நினைவு சுழற்கோப்பையும், இரண்டாவது வெற்றி பெற்ற அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் முமாச கோப்பையும், மூன்றாவதாக வெற்றி பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் ஆறுதல் பரிசுகளையும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
முன்னதாக தமிழர் பண்பாட்டை விளக்கும் விதமாக கரகாட்டம், பொய்கால் குதிரை உள் ளிட்ட கிராமப்புற கலை நிகழ்ச்சிகள் நடை பெற் றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, வழக்கறிஞர்கள் கேஎம். தண்டபாணி, அருள் மொழி, ஜிடி.ராஜேந் திரன், மா.செல்வராஜ், முரா.செல்வராஜ், கோட்டை அப்பாஸ், சிங்கை பிரபாகரன், கமல் மனோகரன், ஜிடி.ரமேஷ், சிங்கை எஸ்.பிரபாகரன், மனோகரன், குப்பனூர் பழனிச்சாமி, கண்ணன், ஆனந்தன், உமா மகேஸ்வரி, கல்பனா, பகுதி கழக பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், வார்டு செயலாளர் ஏஎஸ்.நடராஜ், இளைஞரணி அமைப்பாளர் தளபதி இளங்கோ, பகுதி கழக பொறுப்பாளர்கள் சிங்கை சிவா, மார்க்கெட் மனோகரன், நாகராஜ், பத்ருதீன், வார்டு செய லாளர்கள் சண்முக சுந்தரம், மேகநாதன், யூசுப், அக்ரிபாலு உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.