fbpx
Homeபிற செய்திகள்70 வயது மூதாட்டிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து என்எம் மருத்துவமனை சாதனை

70 வயது மூதாட்டிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து என்எம் மருத்துவமனை சாதனை

கோவையை அடுத்த அன்னூரில் என்எம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், இதய நலத்துறை, பல் மருத்துவம், எலும்பு மற்றும் மாற்று அறுவை சிகிச்சை, சரும நோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவையை அடுத்த கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜானகி என்ற 70 வயது கொண்ட பெண் பலமாதங்களாக நடக்கமுடியாமல் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் பயனளிக்காத நிலையில் அன்னூரில் அமைந்துள்ள என்எம் மருத்துவமனைக்குவந்துள்ளார்
அவருக்கு என்எம் மருத்துவம¬ னயின் எலும்பு முறிவு மருத்துவர் கணேஷ் தலைமையிலான குழுவினர்.

அந்தப் பெண்மணிக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு அதிநவீன கருவிகள் உதவியுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

பின்னர் பேசிய மருத்துவர் கணேஷ், இந்தப் பெண்மணி எங்கள் மருத்துவமனைக்கு வரும் போது நடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்ததாகவும் உட னடியாக அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு உடனடியாக அவருக்கு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் இப்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் அவரே எழுந்து நடப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய என்எம் மருத்துவமனை தலைமை மருத்துவர் மஞ்சுளா மற்றும் மருத் துவமனை தலைவர் நடராஜ் ஆகி யோர் கூறுகையில், கிராமப்புற மக்களிடம் தகுந்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய யாரும் முன்வருவதில்லை என்றும் இந்த அறுவை சிகிச்சையினால் எளிதில் நடக்க செய்வதோடு தங்கள் வாழ்நாட்களை அதிகரிக்கச் செய்வதாகவும் தெரிவித்தனர்.

எங்க ள் மருத்துவமனையில் பல்வேறு சிறந்த சிகிச்சையினை குறைந்த கட்டணத்தில் செய்வதாகவும் இதனை கிராமப்புற மக்கள் பயன்படுத்தி தன் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் ஆனந்த் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்

படிக்க வேண்டும்

spot_img